திருப்பூர் ஜூலை:4
மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜ யலலிதாம்பிகை அவர்கள் தலைமையில் திருப்பூரில் பானிபூரி தயாரிக்கும் இடங்கள் மற்றும் சாலயோரங்களில் உள்ள பானிபூரி விற்பனை கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.ஆய்வில் பானி பூரி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் மற்றும் தயாரிக்கக்கூடிய இடத்தினுடைய சுகாதாரம் தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் போன்ற அனைத்து நிலைகளிலும் பானி பூரி தயாரிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. பானீபூரி தயாரிப்பாளர்கள் ஐந்து நபர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு 55ன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் சுகாதாரமான தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு அளிக்கபட்டது. மேலும் இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயலலிதாம்பிகை அவர்கள் கூறுகையில் திருப்பூர் மாநகரத்தில் பானிபூரி தயாரிக்க கூடிய தயாரிப்பு நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பூரி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்களான மைதா ரவை தரமானதாக உள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பூரி தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய எண்ணையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மீண்டும் அதே எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என்றும் பொறித்த எண்ணையின் மீது மீண்டும் புதிதாக எண்ணையை ஊற்றி டாப் அப் செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் தயாரிப்பு மேற்கொள்ளக் கூடிய இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கிருமி மற்றும் பூச்சி தொற்று இல்லாதவாறு பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பாணி பூரிக்கான பானி தயாரிக்கும் பொழுது பயன்படுத்தக்கூடிய புதினா,மல்லித்தழை, மிளகாய், மசாலுக்கு பயன்படுத்தக் கூடிய கிழங்கு,வெங்காயம் போன்ற பொருட்கள் தராமனதாகவும் தினமும் வாங்கி பயன்படுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதில் ரசயாணகலவை ஏதும் இல்லாதவறு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.மேலும் பானீ தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் நல்ல தரமான குடிநீரை பயன்படுத்தும்படி யும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியாகவும் அறிவுறுத்தப்பட்டது.பானி பூரி மற்றும் பானி மற்றும் அதற்கான மசால் வகைகளை தயார் செய்யும் பொழுது தயாரிக்கின்றவர் தன் சுத்தத்தை கடைபிடிக்கும்படியாகவும் சுகாதாரமான இடத்தில் வைத்து தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் தயாரிக்கப்பட்ட பானிபூரி, பானீ மற்றும் மசால் வகைகளை விற்பனைக்காக எடுத்துச் செல்லும் பொழுது நன்றாக மூடிய நிலையில் எடுத்து சென்று சுகாதாரமான இடத்தில் வைத்து விற்பனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் தெரு ஓரங்களில் அசுத்தமான இடங்களில். கழிவுநீர் செல்லும் பாதைகளின் அருகில் வைத்து விற்பனை மேற்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பாணிபுரியை விற்பனை செய்பவர் பூரியை உடைத்து அதிலே பானீயை சேர்த்து விற்பனைக்கு வழங்கும் பட்சத்தில் கண்டிப்பாக கையுறை மற்றும் தலையுறை அணிந்திருக்கம்படியாகவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது அந்த இடத்தில் சுகாதாரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் தாங்கள் பாணிபூரி கடைகளில் பானிபூரிகளை வாங்கி உண்ணும் போது விற்பனையாளரின் தன் சுத்தம் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் விற்பனையாளராள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொண்டு விழிப்புடன் செயல்படவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுபோன்ற தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் ஏதேனும் உணவு குறித்த புகார்கள் தெரிவிக்க விரும்பும் பட்சத்தில் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.