மதுரை ஜூலை 4,
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மதுரை மாவட்டம் சார்பாக பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மற்றும் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் இணைந்து
மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் அமைந்துள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எல் கே ஜி,
யு கே ஜியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பேக், நோட், பென்சில், ஸ்கேல், ரப்பர்
ஆகியவற்றை அமைப்பில் பயணிக்கும் எட்வர்ட் மற்றும் கிருஷ்ணன் மூர்த்தி பேக் நன்கொடையாக வழங்கினார்கள். அதேபோல் அமைப்பில் உள்ள செல்வி. பாண்டீஸ்வரி நன்கொடையாக நோட் மற்றும் எழுது பொருள்கள் வழங்கி உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மதுரை மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு , மாவட்ட செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், மற்றும் உறுப்பினர்கள் பாண்டி, மணிகண்ட ராஜா, மற்றும் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழக மாநில மகளிர் அணி தலைவி மஞ்சுளா, மாநில இணைச்செயலாளர் செல்வி, மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை, மதுரை மாவட்ட மகளிர் அணி தலைவி விஜயலெக்ஷ்மி, துணை தலைவி மீனா குமாரி, திண்டுக்கல் மாவட்ட தலைவி விஜயலெக்ஷ்மி , நிர்வாகி அமுதா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சகாய பாத்திமா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.