தஞ்சாவூர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிர்வாக அலுவலர் பணி ஓய்வு, பாராட்டு விழா!!
தஞ்சாவூர் ஜூலை.4
தஞ்சாவூர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி கோட்ட அலுவலக நிர்வாகஅலுவலர் பணி ஓய்வு பாராட்டு விழா நடை பெற்றது.
தஞ்சாவூர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகத் தில் பணியாற்றி வந்த நிர்வாக அலுவலர் செண்பகராமன் பணி யில் இருந்து ஓய்வு பெறுவதை யொட்டி பாராட்டு விழா நடந்தது.
விழாவில் கோட்ட மேலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அனைவரை யும் நிர்வாக அலுவலர் திவ்யா வரவேற்றார்.உதவி மேலாளர் தனலட்சுமி, நிர்வாக அலுவலர் பார்வதி, காரைக்குடி நிர்வாக அலுவலர் ஓய்வு சங்கரநாராய ணன் ,அரியலூர் கிளை மேலாளர் தியாகராஜன் ,ஊழியர்கள் ஸ்ரீராம் காவேரி, திலகவதி, மகாலெஷ்மி பிரபு,ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஜெயக்குமார் சத்தியநாதன் விஜயகுமார் சுந்தரமூர்த்தி முகவர் பிரம்மையன்ஆகியோர் பாராட்டு ரை வழங்கினர்
நிர்வாக அலுவலர் செண்பக ராமன் ஏற்புரை வழங்கினார்.