அரியலூர்,ஜூலை:03
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 1 முதல் 6 வரை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி 2 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை திருச்சி சாலையிலுள்ள அஞ்சல் நிலையத்தை முற்றுக்கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.