நாகர்கோவில் ஜூலை 02
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில், காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் திட்டமான “மகிழ்ச்சி” வகுப்பு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது.
இவ்வகுப்பில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் “காவலர்கள் உடல் நலத்தை பேணுவது போன்று மனநலத்தையும் பேணிக்காக்க முனைப்பு காட்ட வேண்டும் எனவும், இன்னும் நம்மிடையே மனநலம் காப்பது பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை எனவும், உடலில் கேடு வரும்போது மருத்துவரை அணுகி சரி செய்வது போன்று மனநலம் காக்க தேவையான உதவிகளை எடுத்துக்கொள்ள தயங்கக்கூடாது ” எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களில் யாருக்கேனும் மனரீதியான பிரச்சனைகள் இருப்பின் மன நல ஆலோசனை பெற காவலர் குடும்ப நல மையத்தை உடனடியாக அணுக 7305033041 என்ற எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிமுகம் செய்து வைத்தார்.
இப்பயிற்சி வகுப்பில் மனநல ஆலோசகர்கள் மற்றும் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.