நாகர்கோவில் ஜூலை 2
குமரி மாவட்டம் நாகர்கோவில் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாகக நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற முன்பாக நடந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு மத்திய அரசின் புதிய முப்பெரும் சட்டத்தை எதிர்த்து கண்டனயுரையாற்றினார். உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்துணை தலைவர் சரவணன், மாநகர வழக்கறிஞரணி அமைப்பாளர் சகாய டெல்வர் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.