மதுரை ஜூலை 1,
ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்பி கோரிக்கை
மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் டில்லியில் உள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினார். அதில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்கும் தேதியை விரைந்து அறிவிக்க வேண்டுமென ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் வலியுறுத்தினர்.
மேலும் அந்த ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதில் சரக்கு ரயில் லோகோ பைலட்டுகள் ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள் 3 அல்லது 4 நாட்கள் வீடு திரும்புகிறார்கள். தொடர்ந்து 4 இரவுகளுக்கு மேல் வேலை செய்கிறார்கள் என்பதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன் என்று பேசியதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.