திண்டுக்கல் ஜூலை :1
திண்டுக்கல் லயன்ஸ் சங்கம் சார்பாக மகளிர் தின விழா, லயன்ஸ் பள்ளியின் ஆசிரியர்களை பாராட்டும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன். டாக்டர். ஆர். குப்புசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் தேவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மத நல்லிணக்க சமூக ஆர்வலர் லயன். டாக்டர். என்.எம்.பி. காஜாமைதீன் , மாவட்ட முதன்மை ஆலோசகர் லயன். எஸ்.எஸ் . ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சியில் லயன்ஸ் பள்ளியின் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பொன்னாடையை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.