சர்வதேச போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்
தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவும் அவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழக காவல்துறை சார்பிலும் , பள்ளி கல்வித்துறை சார்பிலும் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி சார்பாக, போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு பள்ளியிலிருந்து பேருந்து நிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை இப்பேரணி நடைபெற்றது. இதில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள் பலர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.