சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கானா சபாவில்
ஆனந்தமயா நாட்டியாலயா பள்ளி மாணவி ஆ.ருக்ஸானாவின் பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாணவியின் குருவும் ஆனந்தமயா நாட்டியாலயாவின் இயக்குனருமான டாக்டர் ஆர்த்தி கார்த்திகேயன் ஏற்பாட்டில் சிறப்பாக அரங்கேற்றம் நடைப்பெற்றது.
இதில் மாணவி ருக்ஸானா கலந்து கொண்டு தொடர்ந்து 2 மணி நேரம் பல்வேறு பாடல்களுக்கு சிறப்பாக அரங்கேற்றம் செய்து அசத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் மற்றும்
இந்தியாவின் கலாச்சாரத்திற்கான உலகளாவிய தூதரும்
கலைமணி கலை இளையமணி டாக்டர். ஜே. அரவிந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டு அரங்கேற்றம் செய்த மாணவிக்கு ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் விருது வழங்கி கவுரவித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசுகையில்
இந்த பரதநாட்டியம் நிகழ்ச்சியில் பாடல்கள் முழுவதும் எல்லாருக்கும் புரியும் வகையில் தமிழ் பாடல்களை பாடியது பாராட்டுகுரியது. ஒவ்வொரு மாநிலத்திற்கு என்று ஒவ்வொரு நடன கலையை பாரம்பரிய கலையாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பரிய கலையாக பரதநாட்டியம் விளங்குகிறது. இந்த பரதநாட்டியம் நடன கலையை அனைத்து தரப்பினருக்கும் நாம் எடுத்து செல்ல வேண்டும் என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து மாணவி ருக்ஸானா செய்தியாளர்களிடம் கூறும்போது, 5 வயதில் இருந்து தான் பரதநாட்டியம் கற்று வருவதாகவும் இடையில் சிறிது காலம் விடுபட்டாலும் தொடர்ந்து எனது குரு
ஸ்ரீமதி டாக்டர் ஆர்த்தி கார்த்திகேயன் கற்று கொடுத்த பயிற்சியால் தான், நான் அரங்கேற்றத்தை சிறப்பாக முடித்தாக மாணவி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஆனந்தமயா நாட்டியாலயா பள்ளியின் மாணவிகள் மற்றும் மாணவி ருக்ஸானாவின் பெற்றோர் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.