,திருப்பூர், ஜூன்:30
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அனைத்து அதிமுக கவுன்சிலர்களும் மாநகராட்சி மேயரை கண்டித்தும், மாமன்ற கூட்டத்தை புறக்கணித்தும் கோஷமிட்டனர்.