தஞ்சாவூர் ஜூன் 28
தஞ்சாவூரில் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் தமிழக முதலமைச்சர் .மு.க.ஸ்டாலி ன் ஆணையின்படி ரூபாய் 2 கோடி யே 50 லட்சம் மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார்மையம் கட்டப் பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப் பு தொடக்க விழா நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் குத்துவிளக்கேற்றி தொட ங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்:
மாணவர்கள் அறிவு சார் மையத் தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இங்கு கணினி வசதிக ள் ஏராளமான புத்தகங்கள், அமர்ந் து படிக்க இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு நேரம் திட்ட மிடல் அவசியம் படிப்பதிலிருந்து குறிப்பெடுத்தல் மற்ற மாணவர்க ளுடன் கலந்தாலோசனை, ஏற்கன வே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களோடு ஆலோசனை செய்து கடின உழைப்புடன் முயற்சி, பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள் கிறேன் என்றார்.
இப்பயிற்சியில் பங்கேற்ற 200 மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடி மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பதிலளித்தார். இங்கு சிறந்த பயிற் சியாளர்கள் மூலம் மாணவர்களு க்கு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மதிய உணவு உண்பதற்காக இருக்கை வசதி யுடன் கூடிய தனி அறை அமைக்கப் பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் ரோசி, துணை மேயர் டாக்டர் அஞ்சு கம் பூபதி, தாசில்தார் அருள்ராஜ். ஓய்வு பெற்றபேராசிரியர் சுகுமார் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.