தஞ்சாவூர் ஜூன் 27
தஞ்சாவூர் பனங்கள் கட்டிடம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலர் விஜயலட்சுமி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலர் காரல் மார்க்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட த்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் முத்து.உத்திராப தி தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்து உரிய விசாரணை செய்து உடனடியாக குற்றவாளிகளையும், வேதிப்பொரு ள்களை அளித்த நபர்களையும் கைது செய்ய வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் தடையின்றி மாணவர்கள் இளைஞ ர்களுக்கு விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். போதை இல்லா த தமிழ்நாட்டை உருவாக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
இதில் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் சுதந்திர பாரதி துணை செயலாளர் பிரபாகர், இந்திய மாத தேசிய சம்மேளன மாவட்ட தலைவர் கண்ணகி, பொருளாளர் இந்துமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட து|ணை செயலாளர் சக்திவேல், . ஒன்றிய செயலாளர்கள் வாசு இளையராஜா பூபேஷ் குப்தா , மாநகர செயலாளர் முத்துக்குமரன், ஏஐடி யூ சி மாவட்ட செயலர் துரை. மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்