ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக 12 வயது முதல் 65 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அண்ணா பூங்கா மைதானத்தில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக 2 நாட்கள் நடைபெற உள்ள விளையாட்டு போட்டியில் 100 – க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
மேலும் திருநகர் ஹாக்கி கிளப் -ன் 25 – ஆவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இப்போட்டியில் 12 வயது முதல் 65 வயது வரையிலான வீரர்கள் போட்டியிட்டு விளையாடி வருகின்றனர். இதில் அனுபவமிக்க வீரர்கள் வயது குறைந்த ஹாக்கி வீரர்களுக்கு விளையாட்டின் நுட்பத்தை அவர்களுக்கு கற்பிக்கும் விதமாக அவர்களுடன் இணைந்து ஒருவருக்கொருவர் போட்டியிட்டு விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக விளையாடிவருகின்றனர்.
இப்போட்டியில் 12 வயது ஹாக்கி வீரர்கள் அனுபவமிக்க வீரர்களை தத்தளிக்கும் விதமாக அவர்களுடன் போட்டியிட்டு விறுவிறுப்பாக ஓடி விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.