நாகர்கோவில் ஜூன் 23
கன்னியாகுமரி மாவட்டம். ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக இத்திட்டத்தை கைவிடக் கோரியும் கொட்டாரத்தில் தர்ணா போராட்டம்
போலி நகர் மயமாக்கல் என்ற பெயரில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமிதோப்பு, கரும்பாட்டூர், நல்லூர் ,ரவிபுதூர், ராமபுரம், லீபுரம் ஆகிய ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கொட்டாரத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய நல அமைப்பு தலைவர் சுடலையாண்டி தலைமை வகித்தார், ஊராட்சி தலைவர்கள் மதிவாணன், தங்கமலர், ஜெயக்குமாரி, நீலா, இந்திரா, தேவி ,ஸ்டனி மற்றும் ஊராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.