சென்னை, ஜூன்,20,
நீட் தேர்வில் தேசிய அளவில் நாராயணா பள்ளிகள் அதிகமான முதலிடம் மற்றும் 700 க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதனை படுத்தியுள்ளனர். 23மாநிலங்களில் 230 க்கும் மேலான நகரங்களில் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளின் என , கல்வி நிறுவனங்கள் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய கல்விக் குழுமங்களில் நாராயணா பள்ளிகள் ஒன்றாகும். இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக 2024 நீட் தேர்வின் முடிவுகள் அடிப்படையில் நாராயணா கல்வி குழுமத்தில் பயிலும் 9 மாணவர்கள் 720 க்கு 720 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். 15 மாணவர்கள் 715 மதிப்பெண்களும் 105 மாணவர்கள் 700 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நாராயணா பள்ளியில் ஆதித்யா குமார் 720 க்கு 720 மதிப்பெண் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கான பாராட்டு விழா நிகழ்ச்சி சென்னை முகப்பேர் நாராயணா பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும்
நாராயண கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் டாக்டர் பி.சிந்துரா மற்றும் பி.சரணி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் இயக்குநர் பி.சிந்துரா பேசியதாவது:-
” நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு குறிப்பாக முதலிடம் பிடித்த ஆதித்யாகுமாருக்கும், மற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாராயணா பள்ளி மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது. இருப்பினும் மாணவர்களின் வெற்றிக்கு அர்ப்பணிப்பும், விடாமுயற்சியே முக்கிய காரணமாக விளங்குகிறது. இதற்கு பள்ளியில் நீட் பயிற்சி தரும் ஆசிரியர்கள் ஊக்கத்தை தருபவர்களாக உள்ளனர்.
தேசிய அளவில் நீட் தேர்வில் நாராயணா பள்ளி யாரும் தொடாத புதிய இலக்கை தொட்டிருக்கிறது என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார்