திருப்பூர் ஜூன்:19
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொல்லியல் துறையின் சார்பில் 2024-ம் ஆண்டுக்கான அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சோ.அம்மாபட்டி பகுதியில் கொங்கல்நகரம் அகழாய்வுப் தொடக்கப் பணியினை பார்வையிட்டார்கள். உடன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், தொல்லியல் அலுவலர் மற்றம் கொங்கல்நகரம் அகழாய்வு இயக்குநர் செல்வி ரா.காவியா மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.