கிருஷ்ணகிரி,ஜுன்.19 – கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி உட்கோட்டம் பெருகோப்பனப்பள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பில்லக்கொட்டாய் என்ற இடத்தில் மின்சாரக் கம்பி நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மின்கம்பி அறுந்து விழுந்தது. அந்தப் பகுதியில் மின்சாரம் இரவு முழுவதும் துண்டிக்கப்பட்டது, இது குறித்து மின் ஊழியர் ராமசாமி என்பவரிடம் போன் செய்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் ஊழியர் ராமசாமி கூறிய பதில் நான் ஒருவனாகவே தொகரப்பள்ளியிலிருந்து கண்ணன்டஹள்ளி வரை நான் வேலை செய்து வருகிறேன். இங்கு ஆள் பற்றாகுறையாக உள்ளது. தற்போது என்னால் ஒன்றும் செய்ய முடியாது, என்று கூறியதாக அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அங்குள்ள மக்கள் ராமசாமி என்பவரை மாற்றினால் மட்டும்தான் மின்சாரம் சீராக எங்கள் பகுதிக்கு கிடைக்கும் என்று கூறுகின்றன. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உமா லட்சுமி பிரபுவிடம் கேட்டபோது நாங்கள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறோம். நாங்கள் கூறினால் கூட அவர் கேட்பதில்லை என்று கூறினார். மின்சார ஊழியர் ராமசாமி சரியாக வேலை செய்யவில்லை பொதுமக்கள் அவரை மாற்ற சொல்லி பல முறை புகார் கூறினார்கள்.இதுகுறித்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஊராட்சி மன்ற தலைவர் கூறினார்.