ஈரோடு ஜூன் 19 திருப்பூரில் இருந்து கோபிக்கு அரசு பஸ் சென்றது இதன் டிரைவராக முருகன் கண்டக்டராக தங்கராசு ஆகியோர் பணியாற்றினர் இந்த பஸ் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோபி வருவதற்காக திருப்பூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தது அப்போது பெண் பயணி உட்கார்ந்திருந்த இருக்கையின் அருகே ஒரு ஆசாமி அமர்ந்தார் அவர் மது போதையில் இருந்ததாகவும் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாகவும் கூறப்பட்டது இதனால் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அந்த பெண்ணை அவரிடம் இருந்து காப்பாற்ற பயணியை பேருந்தில் இருந்து இறக்கி விட்டு அவரை தள்ளிவிட்டனர்
இதனால் அந்த பயணிகீழே விழுந்து விட்டார் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் மது போதையில் இருந்தவரிடம் இருந்து பெண் பயணியை காப்பாற்ற முற்பட்டாலும் குடிபோதையில் இருந்த ஆண் பயணியை தள்ளிவிட்டது குற்ற செயலாகும் இதனால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.