அரியலூர், ஜூன்:18
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குவாகம் கிராமத்தில் கிரீன் பவுண்டேஷன் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு விலை இல்லா மரக்கன்றுகளை வழங்கி இயற்கையை வளங்களை பாதுகாத்து வருகிறது அதன் தொடர்ச்சியாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு குழுவிற்கு ஆலம், அரசன், இலுப்பை, புங்கன் நீர் மருது வேம்பு உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிழல் மற்றும் ஆரோக்கியம் தரும் 2500 மரக்கன்றுகளை வழங்கி உள்ளது இந்த நிகழ்ச்சியில் கிரீன் பவுண்டேஷன் நிறுவனர் அன்பரசி தலைமை தாங்கினார். கிரீன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் மற்றும் பரமசிவம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குவாகம் உதவி காவல் ஆய்வாளர் இளங்கோவன் கிராம நிர்வாக அலுவலர் ரவிஆகியோர் கொடியசைத்து நிகழ்ச்சி துவக்கி வைத்தார் கிரீன் பவுண்டேஷன் உறுப்பினர்கள் வேல்முருகன் ராஜேந்திரன் பிரகாஷ் சக்திவேல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.