தேனி.
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் 19.06.2024 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 20.06.2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள், திட்டங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
எனவே இம்முகாமில் பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை (பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை மற்றும் இதர துறைகள்) 19.06.2024-ஆம் தேதி புதன்கிழமையன்று மாலை 4.30 மணிமுதல் 6.00 மணி வரை பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுவினைக் கொடுத்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 19.06.2024 அன்று பெரியகுளம் அரசு மருத்துவமனையில் காலை 10.00 – 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இச்சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று வழங்குதல், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெறுவதற்கு பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் வங்கிகடன் மானியம் போன்ற திட்டங்களில் பயன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
இம்முகாமில் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் புகைப்படம் – 4 உடனும் பிற திட்டங்களுக்கு மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா. தெரிவித்துள்ளார்.