ஈரோடு ஜூன் 17
ஈரோடு எஸ் கே சி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது இங்கு 300 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் மேலும் இங்கு 2 அங்கன்வாடி மையங்கள் உள்ளன இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் இருப்பதால் கூடுதல் பள்ளி வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கும்படி பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது
இது தொடர்ந்து தனியார் தன்னமைப்பு சார்பில் இந்த பள்ளியின் முதல் தளத்தில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் நூலகம் கட்டப்பட்டுள்ளது
இதன் திறப்பு விழாவுக்கு தன்னார்வ அமைப்பின் ஈரோடு பிரிவு தலைவர் விக்ரம் தலைமை தாங்கினார் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார் மாநகராட்சி மண்டல தலைவர் சசிகுமார் கவுன்சிலர் ரேவதி திருநாவுக்கரசு நூலக நன்கொடையாளர் தொழில் அதிபர் காந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்
விழாவில் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்துகொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து வகுப்பறை கரும்பலகையில் வாழ்க வளமுடன் என்று எழுதினார் துணை மேயர் செல்வராஜ் நூலகத்தை திறந்து வைத்தார் இதில் திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம் பகுதி செயலாளர் அக்னி சந்துரு வார்டு செயலாளர் திருநாவுக்கரசு மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் ஆனந்த் ஆசிரியர் பயிற்றுநர் பிரியா தன்னார்வ அமைப்பு நிர்வாகி இளங்கவி உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹேமலதா நன்றி கூறினார்.