ஆம்பூர், ஜூன்.15-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூரில் உணவுப் பொருள் வலங்கள் மற்றும் பொது விநியோகத் திட்டம்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர். பாரதி தலைமை தாங்கினார். மேலும் இந்த முகாமில் கரும்பூர் பகுதி சுற்றி உள்ள வீராங்குப்பம் குமாரமங்கலம் சின்ன கரும்பூர் கம்பகிருஷ்ணா பள்ளி,பார்ச்சனா பல்லி, வெங்கடசமுத்திரம், உப்பர்பள்ளி ஆகிய கிராம பொதுமக்கள் பயன் பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல். பெயர் நீக்குதல். முகவரி மாற்றம் .பெயர் திருத்தம். புதிய நகல் அட்டை பெறுதல் போன்றவற்றிற்கு மனுக்கள் பெறப்பட்டன மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கரும்பூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ரங்கநாதன் மற்றும் நியாய விலை கடை சேல்ஸ்மேன் அரசு ஊழியர்கள் பொது மக்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.