தஞ்சாவூர். ஜூன்.16.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில் சரோஜ் நினைவகத்தில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவும், பொறி யாளர் மோகன சுந்தரம் நினை வேந்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
மாவட்டத்தலைவர் கவிஞர் ஜீவபாரதி, தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர்
கவிஞர் களப்பிரன், மாவட்ட செயலர் விஜயகுமார், மாநகர தலைவர் பிம்பம் சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் கவிஞர் வெ. ஸ்ரீ அனைவரையும் வரவேற் றார். பொறியாளர் மோகன சுந்தரம் படத்தை திறந்து வைத்து மேனாள் மாநிலத் தலைவர் தமிழ்செல்வன் நினைவுகளை பகிர்ந்து கொண் டார். மற்றும் பலர் பேசினார்கள்.
மாநில பொதுச் செயலாளர் கவிஞர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றினார். மாநகர பொருளாளர் சுந்தானந்தன் நன்றி கூறினார்.