நாகர்கோயில் ஜூன் 15,
நாகர்கோயில் திருப்பதி சாரம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான நிலத்தை வீட்டுமனை ஆக்க முயற்சிப்பதாகவும் வருவாய்த்துறை இதற்கு துணை போவதாகவும் கூறி இந்து அமைப்புகள் சார்பில் வெள்ளமடம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு விஷ்வ ஹிந்து பரிசத் மாநில திருக்கோயில்கள் திருமடங்கள் அமைப்பாளர் காளியப்பன் தலைமை தாங்கினார் இதில் இந்து முன்னணி நிர்வாகி ஜெயராம்,நாராயண பெருமாள் ராஜா, பாஜக நிர்வாகிகள் சொக்கலிங்கம், வழக்கறிஞர் ரஜினிகாந்த் , செம்பை முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்