தூத்துக்குடியில் வழக்கறிஞர் சங்க 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நடந்தது இதில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவராக ஆர்.தனசேகர் டேவிட், துணைத் தலைவராக தெய்வ தொல்காப்பியன், செயலாளராக ஏ. செல்வின் இணை செயலாளராக ஜஸ்டின், பொருளாளராக வெங்கடேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சார்லஸ்.
கார்த்திகேயன், முருகன், ரமேஷ், செல்வகுமார், செண்பகராஜ், ஸ்ரீநாத் ஆனந்த், விக்னேஷ், தமிழ்ச்செல்வி, நான்சி ஷோபனா ஜெனிபர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் தேர்தல் அதிகாரிகளை கௌரவிக்கும் விழா தூத்துக்குடி கனி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் தனசேகர் டேவிட் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வ தொல்காப்பியன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர் தங்க தலைவர் தனசேகர் டேவிட் மெடல் அணிவித்து சான்றிதழ் வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் தேர்தல் அதிகாரிகளான வழக்கறிஞர்கள், சந்தன குமார் பிள்ளை விநாயகம், உதவி அலுவலர்கள் சங்கரலிங்கம், ஸ்டீபன் அந்தோணி ராஜ், முத்துக்குமார், பவுல் ராஜன், மற்றும் புதிய நிர்வாகிகள் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்கள். விழா முடிவில் செயலாளர் வழக்கறிஞர் செல்வின் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,அதன் பின் வழக்கறிஞர் தங்கத் தலைவர் தனசேகர் டேவிட் செய்தியாளர்களிடம் கூறும் போது “வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் முதல் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து போராட்டம் வெடிக்கும். மேலும் தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வழக்கறிஞர்கள் சங்கம் மூலம் எடுக்கப்படும் என்று கூறினார்.