நாகர்கோவில் ஜூன் 12
நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை வென்று கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்துள்ளது . இதில் பாரத பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பொறுப்பேற்று உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில்
மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணை அமைச்சராகவும் மீண்டும் பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் “வேல் எடுத்து வெற்றி கண்ட ” டாக்டர் எல் .முருகன் பணி மென்மேலும் சிறப்புடன் , தொடர வேண்டுமென பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது,:- மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எல் முருகன் அவர்களின் தன்னிகரில்லா உழைப்புக்கு கிடைத்த வெற்றியே இரண்டாவது முறையாக அவரை
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக்கி உள்ளது.
இவர் 1977, மே 29 -ம் தேதி நாமக்கல் மாவட்டத்தின் கோனூர் கிராமத்தில் பிறந்த எல்.முருகன், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலைப் பட்டமும், அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டமும் பெற்ற அவர்
சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றியவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி முருகன், 1997-ல் தனது கல்லூரிப் பருவத்தின்போதே இந்துத்துவா சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மாணவர் பிரிவின் உறுப்பினராக இணைந்தார். அதன் பிறகு, தேசிய தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி., எஸ்.டி) ஆணைய துணைத் தலைவராக இருந்தார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடிய முருகன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அணியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால்
தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார். இவர் தமிழக பாஜக தலைவராக, 2021 வரை அப்பதவியில் இருந்தார். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று கூறியவர்கள் மத்தியில் பாஜக-வுக்கு 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களைப் பரிசாக அளித்து தாமரையைத் தமிழகத்தின் தொகுதிகளுக்குள் மலரவைத்ததில் பெரும் பங்கு உண்டு.வெகு காலத்துக்குப் பிறகு சட்டசபைக்குள் பாஜக காலடி எடுத்துவைத்திருப்பது பாஜக தலைமையை வெகுவாகக் கவர்ந்தது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக வேட்பாளர்கள் இடம்பெற்றது அவரின் “வேல் யாத்திரை” பயணம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது
தற்போது அவர் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால் தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வருவது மட்டுமல்லாமல் தனக்கு இணை அமைச்சராக கொடுக்கப்பட்ட துறைகளில் தனி முத்திரை பதித்து தமிழக மக்களின் நலனுக்காக சமுதாய பணியாற்ற கிடைத்த இந்த நல்ல தருணத்தை அவர் சீரும் சிறப்புடனும் செயல்படுத்த தமிழக பாஜக அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறி இந்த நல்ல தருணத்தில் அவருக்கும் அவர் பணிக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.