ஈரோடு
தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 33 வது முறையாக இலவச ஹோமியோபதி மருத்துவமுகாம் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள அரிமா சிறப்புப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது
ஏற்றம் அறக்கட்டளை சார்பில் இந்த முகாம் நிறுவன தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது
இதை டாக்டர் ஜவகர் துவக்கிவைத்தார்
அறங்காவலர்கள்
டாக்டர் அருண்குமார் மற்றும் அருள்முருகன் அவர்கள் முன்னிலை வகித்தனர் இந்த மருத்துவ முகாமில் கோவை , ஈரோடு ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க டாக்டர்கள் கலந்து கொண்டு
அரியவகை நோயான தசைசிதைவு பாதிக்கபட்டோர்களுக்கு சிகிச்சை அளித்தனர்
இதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்
இந்த அரியவகை நோயை குணபடுத்த மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில்
இந்த மருத்துவகுழுவினரின் ஐந்து வருட தொடர் சிகிச்சையில் நோயை பெருமளவில் கட்டுபடுத்திவுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கவை
இந்த முகாமில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அனுசூயா என்ற பெண் சென்னையில் இருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த படி தனியாக ரெயிலில் வந்து கலந்து கொண்டார்.