நாகர்கோவில் ஜூன் 11
கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார்.
பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாரத நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இருப்பது ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வு ஆகும். நாடு விடுதலை அடைந்த பின்பு, நேரு மட்டுமே மூன்று முறை தொடர்ந்து பிரதமராக இருந்தார் என காங்கிரஸார் பேசி வந்த நிலையில் நேருவின் சாதனையை நேர் செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. காங்கிரஸ் பேசியது பழைய வரலாறு. பாஜக படைத்திருப்பது புதிய சகாப்தம். உலக அரங்கில் இந்திய திருநாட்டை தலைநிமிர வைத்தவர். வறுமையை நீக்கி வளர்ச்சியை தந்தவர். ஏழை, எளிய மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கிராமங்கள் தோறும் குடிநீர் இணைப்பு, ரேசன் கடைகளில் ஐந்து கிலோ இலவச அரிசி, கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்னும் நிலை என கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் நடந்துள்ளன. அதனால் தான் பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியிருப்பதை ஒவ்வொரு இந்தியர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
2004 முதல் 2014 வரை ஊழல் ஆட்சி செய்த காங்கிரஸால் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பெயர் மிகவும் சரிவுற்று இருந்தது. கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார். உலகத் தலைவர்கள் வரிசையில் சர்வதேசமும் அவரைக் கொண்டாடுகிறது. இந்தியர்களுக்கு நல்வாய்ப்பாக பிரதமர் நரேந்திர மோடியே மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றிருப்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். அவராடு பதவியேற்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.