கன்னியாகுமரி,ஜூன்.10-
மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்றார் .இதை கொண்டாடும் விதமாக நேற்று சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பு மற்றும் காந்தி மண்டபம் ஆகிய பகுதிகளில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர் .
நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பா.ஜ.,பார்வையாளர் சுபாஷ் தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட தர்மராஜ் கலந்துகொண்டு இனிப்புகளை பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள் சுயம்பு, சுயம்புலிங்கம், ஒன்றிய துணைத் தலைவர் ராஜன், கவுன்சிலர் அய்யப்பன், கன்னியாகுமரி நகர தலைவர் ஜெய ஆனந்த்,, நிர்வாகிகள் கண்ணன்,இளையராஜா, பரத், குமரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.