தஞ்சாவூர்.ஜூன் 9
தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத் தின் முதுகலை இலக்கியத்துறை யில் மாணவர் சேர்க்கை நடை பெற்றது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் தமிழகத்தை சேர்ந்த பல்வே று மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் இலக்கி யத்துறையில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த முதுகலை முதலா ம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டு 75 விண்ணப்பங்கள் பெறப் பட்டு இனவாரி சுழற்சி அடிப்படை யில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சேர்க்கை பல்கலைக் கழக பேரவை கூடத்தில் நடை பெற்றது.
இந்த சேர்க்கையில் கலந்து கொண்ட 38 மாணவர்களில் 34 மாணவர்கள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை, தாங்கி னார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் பல்கலை க்கழக இலக்கிய துறையின் முன்னாள் துறை தலைவருமான பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார்.உதவி பேராசிரியர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
கலைப்புல முதன்மையரும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருமா ன இளையாப் பிள்ளை பதிவாளர் பொறுப்பு தியாகராஜன், மொழிபுல முதன்மையர் கவிதா, மொழி பெயர் ப்பு துறை தலைவர் முருகன், நாட்டுப்புறவியல் துறை உதவி பேராசிரியர் இளையராஜா, மொயியல் துறை உதவி பேராசிரி யர் ரமேஷ், நிதி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சேர்கைப் பிரிவு கண்காணிப்பாளர் ரேவதி, மற்றும் சேர்க்கை பிரிவு நிலைப் பணியாள ர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்