மதுரை ஜூன் 9,
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் 2024 – 25 ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற ஜூன் 10-ந்தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 12-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு கல்லூரி கயல்
அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 10-ந்தேதி கணினி அறிவியல், கணிதம்(தமிழ் மற்றும் ஆங்கிலவழி) ஆகிய பாடங்களுக்கு இரண்டு சுழற்சிகளிலும், கணினி பயன்பாட்டியியல், இயற்பியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வேதியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), விலங்கியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), தாவரவியல், மனையியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு
நடைபெறுகிறது. 12-ந்தேதி வணிகவியல் பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும், வணிக நிர்வாகவியல், பொருளாதாரம் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) வரலாறு (தமிழ் மற்றும் ஆங்கில வழி), புவியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 13- ந் தேதி தமிழ் பாடத்திற்கு சிறப்புத்தமிழ் படித்து விண்ணப்பித்த அனைவருக்கும் இரண்டு சுழற்சிகளிலும், பொதுத்தமிழ் படித்தவர்களுக்கு இரண்டு சுழற்சிகளிலும், ஆங்கிலம் பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது
இந்த கலந்தாய்வு குறித்ததகவல்கள் மாணவிகளுக்கு மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலமும் அனுப்பப்படும். கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு காலியிடங்கள். மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை உறுதி செய்யப்படும். மாணவிகளின் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவிகள் எஸ்.எஸ். எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ். இணையவழி சாதி சான்றிதழ் அல்லது இணையவழி ஒப்புகை சீட்டு, வங்கி சேமிப்பு புத்தக முதல் பக்க நகல், பதிவிறக்கம்
செய்யப்பட்ட விண்ணப்ப படிவ நகல், கலந்தாய்வு அழைப்பு நகல் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடனும், 3பாஸ்போர்ட் அளவு புகைப்ப டம், கல்விகட்டணம் (தோராயமாக) ரூ.2,650, ஆதார் அட்டை இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் பாடவாரியான கலந்தாய்வு அன்று மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்தாய்வு அன்று வரவில்லை என்றால் கல்லூரியில் வாய்ப்பு பெற இயலாது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் வானதி தெரிவித்துள்ளார்