கன்னியாகுமரி, ஜூன் 7
தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலர் பாபு தலைமை வகித்தார். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலர் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட திமுக நிர்வாகிகள் அன்பழகன், பொன்.ஜாண்சன், எம்.ஹெச்.நிசார், ஆர்.டி.ராஜா, கெய்சர்கான், இன்பராஜ், புஷ்பராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் இக்பால், ஆட்லின் சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் சகாய ஆன்றனி, நாகராஜன், நாஞ்சில் மைக்கேல், முத்துராமன், ரூபின், சிலுவை, தாமரை பிரதாப், அகஸ்தியலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.