மதுரை கப்பலூர் ஆனமலை டொயோட்டோஸ் நிறுவனத்தில் புதிய வகை கார் அறிமுகம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் செயல்பட்டு வரும் ஆனைமலை டொயோட்டோ நிறுவனத்தில் புதிய வகை டொயோட்டோ டைசர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு விற்பனைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் கார் உற்பத்தி சந்தையில் இந்தியாவின் முன்னணியில் திகழ்ந்திடும் டொயோட்டோ நிறுவனம் தற்போது டொயோட்டோ டைசர் என்னும் புதிய வகைகளை அறிமுகம் செய்துள்ளது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்கு மாடல்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் ரூபாய் 7.39 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரின் அறிமுக விழா கப்பலூரில் செயல்பட்டு வரும் ஆனமலை டொயோட்டோ நிறுவனத்தில் காலை சிறப்பாக நடைபெற்றது
அப்போது டொயோட்டோவின் புதிய வெளியீடான டொயோட்டோ டைசர் காரினை டொயோட்டோ மேனேஜிங் டைரக்டர் ரகுராம் திரைப்பட நடிகர் சுல்தான் திரைப்படபுகழ் காளையன் ஆகியோர் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்து விற்பனைக்கான முன் பதிவினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பொது மேலாளர் சேது ராஜன் துணை பொது மேலாளர் கார்த்திகேயன் விற்பனை மேலாளர் வினோத்குமார் சேவை மேலாளர் முருகேசன் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வணிக மேலாளர் சண்முகம் மயில் ஆகியோர் செய்திருந்தனர்.