அரியலூர், ஜூன்:04
நுண் பார்வையாளர்களை (Micro Observer) கணினி மூலம் தெறிவு முறையில் (Randomization) ஒதுக்கீடு செய்யும் பணி மற்றும் பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ், சிறப்பு பார்வையாளர் ராகேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 27- சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி 2024, வாக்கு எண்ணிக்கை 04.06.2024 இன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபடவுள்ள நுண்பார்வையாளர்களை (Micro Observer) கணினி மூலம் தற்செயல் தெறிவு (Randomization) முறையில் தேர்வு செய்யும் பணிகள் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ், சிறப்பு பார்வையாளர் ராகேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று (03.06.2024) நடைபெற்றது.
27-சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுபாபட்டுக் கருவி, வி.வி.பேட் ஆகியவை தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்று நடைபெறவுள்ளதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களை (Micro Observer) கணினி மூலம் தற்செயல் தெறிவு (Randomization) முறையில் தேர்வு செய்யும் பணிகள் இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் /சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அதன்படி மத்திய அரசு பணிகளில் பணிபுரியும் பணியாளர்கள் 306 நபர்கள் நுண்பார்வையாளர்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்றது. இப்பயிற்சியில் வாக்கு எண்ணிக்கை மற்றும் தபால் வாக்குகள் எண்ணிக்கையின் போது நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.