நிலக்கோட்டை,டிச.10:
தமிழ்நாடு நில அளவையர் சங்கம் சார்பில் 9-அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி நிலக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில், ஒருநாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில்,தமிழ்நாடு நில அளவையர் சங்க மாநில மையம் அறிவுறுத்தல்படி,மாவட்ட துணை தலைவர் காஞ்சிகுமார் தலைமையில் தாலுகா அளவிலான நில அளவையர் சங்கம் சார்பில் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது,
இதில் களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திடவும், பொதுமாறுதல் அரசாணை என் 10-ஐ உறுதிபடுத்தவும்,ஆய்வாளர்,துணை ஆய்வாளர்களின் ஊதிய முரண்பாட்டை கலைத்திட வழியுறுத்தல் உட்பட 9-அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வழியுறுத்தி,நில அளவையர் அனைவரும் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,மேலும் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர், தீர்வு கிடைக்காவிடில் வரும் 19-ம் தேதி வியாழன் கிழமை ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.