திருப்பரங்குன்றத்தில் உள்ள காராள பவனத்தில் நடைபெற்ற 87 – வது பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார் செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வரும் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து காராள குல திலக காருண்ய சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டரை நிர்வாகிகள் முன்பு வெளியிடப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.