ஈரோடு ஆக 13
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு பழையபாளையம் கிருஷ்ணா மகாலில் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது துணைத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார் பொது செயலாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார் பொருளாளர் முருகானந்தம் நிதிநிலை அறிக்கை வாசித்தார் கௌரவ உறுப்பினர்களும் மற்ற பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர் பொது செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு உணவு பொருட்களுக்கும் அரிசி பருப்பு மாவு வெல்லம் கருப்பட்டி சிறுதானியம் கோதுமை ஆகியவற்றுக்கு 5 சதவீதம் வரி செலுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பது சூரிய ஒளி மின் உற்பத்திக்கு தொழில் நிறுவனங்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்குமாறும்
மின் கட்டணம் ஆண்டுதோறும் ஆறு சதவீதம் உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வது ஈரோடு மீனாட்சி சுந்தரனார் வீதியில் இயங்கி வரும் வணிகவரித்துறை அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளது கொடுமுடி சர்க்கிள் அலுவலகம் கரூர் மாவட்டத்தில் உள்ளதால் கொடுமுடி சர்க்கிள் நாடார் மேடு பகுதியில் தொடங்குகிறது எனவே நாடார்மேட்டில் உள்ள ஒரு டீலர் கணக்குகளை சரிபார்ப்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் பணிக்காகவோ கரூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது எனவே கொடுமுடி சர்க்கிள் அலுவலகத்தை புதிய அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் 80 அடி சாலையை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 10 லட்சம் மூட்டைகள் இருப்பு வைக்கும் வகையில் குளிர் பதனக் கிடங்குகளை அரசு அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்
என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன