கோவை ஜன:29
பொள்ளாச்சி நகராட்சி 26 வது வார்டில் சுப்பிரமணியசாமி கோவில் வீதியில் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8.4 லட்சம் ரூ மதிப்பிலான மழை நீர் வடிகால் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. நிகழ்வில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் நித்யானந்தன் ஆகியோர் பூமி பூஜையை துவக்கி வைத்தனர்.
நகர மன்ற உறுப்பினர் எம். கே சாந்தலிங்கம் முன்னிலை வகித்தார், இந்நிகழ்ச்சியில்
திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட அமைப்பாளர் பூபதி, நகர செயலாளர் துரைராஜ்
மற்றும் கொ.ம.தே.கவினர், திமுகவினர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கிய நகராட்சி நிர்வாகத்திற்கு நகர்மன்ற உறுப்பினர் எம். கே . சாந்தலிங்கம் நன்றி தெரிவித்தார்.