நாகர்கோவில் அக் 13
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கதின் சார்பில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அரசு ஊர்தி ஓட்டுநர்களின் 7-ம் ஆண்டு ஆயுத பூஜை விழா மூத்த ஓட்டுநர் ரெஜி முன்னேற்பாட்டின்படி கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்ட தமிழ்நாடு அரசு துறை உறுதி ஓட்டுநர்கள் சங்கத்தினர் 6 ஆண்டுகளாக தொடர்ந்து ஆயுத பூஜை விழா கொண்டாடி வருகின்றனர். 7-வது ஆண்டு ஆயுத பூஜை விழா விஜயதசமியான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அனைத்து அரசு துறையை சேர்ந்த ஊர்தி ஓட்டுனர்களும் தங்கள் அரசு வாகனங்களை சுத்தம் செய்து, சந்தன குங்கும திலகமிட்டு, மலர் மாலை அணிவித்து பூஜைக்கு ஆயத்தப்படுத்தி நிறுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து ஊர்தி ஓட்டுநர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த சாமி படத்திற்கு ஸ்ரீதரன் பிள்ளை பூஜை செய்தும், ஓட்டுநர்களின் அரசு வாகனத்திற்கு தீபாராதனை காட்டி, தேங்காய் சுற்றி ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்து பூஜையை நிறைவு செய்தார். இதில்
மாவட்டத் தலைவர் விஜயகுமார், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நகர துணைத் தலைவர், புறநகர் துணைத் தலைவர், துணைச் செயலாளர் மாவட்ட அமைப்புச் செயலாளர், தணிக்கையாளர், கொள்கை பரப்புச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் பாயாசம், சுண்டல், பஞ்சாமிர்தம், பழம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.