தேனி ஆகஸ்ட் 19:
தேனி விளையாட்டு மைதானத்தில் இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழாவில் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மக்களின் அடிப்படைத் தேவையான சாக்கடை கால்வாய் தினமும் குடிநீர் வினியோகம் குப்பைகள் தேங்காமல் தினந்தோறும் குப்பைகளை அள்ளி கொசு தொந்தரவு இல்லாமல் வாழவும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்தமைக்கும் பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை . ஊக்குவிக்கும் விதமாக டவுன் பஞ்சாயத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ததை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அதன் தலைவர் கா. கண்ணன் காளி ராமசாமி அவர்களுக்கு சிறந்த நிர்வாகத்திற்கும் சிறந்த பேரூராட்சி க்கான விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷ ஜீவனா வழங்கி தங்களின் பொது மக்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் தொடர வேண்டுமென மனதார வாழ்த்தினார். உடன் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் இளநிலை உதவியாளர் வாசிமலை மற்றும் மாவட்ட எஸ்பி ஆர்.சிவப்பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து விருது பெற்ற மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் கா. கண்ணன் காளி ராமசாமி கூறும்போது எங்கள் பேரூராட்சி பொது மக்களுக்கு நாங்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவையை பாராட்டி விருது வழங்கி ஊக்குவித்த தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்களுக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர் .சிவப்பிரசாத் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சா. கிறிஸ் டோபர் தாஸ் அவர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் க சிவக்குமார் அவர்களுக்கு ம் இளநிலை உதவியாளர் வாசி மலை அவர்களுக்கும் மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்