கோவை ஆகஸ்ட்:17
கோவை மாவட்டம் கோவை வெள்ளக்கிணர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி அருள்குமார் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் வெள்ளக்கிணறு பேரூராட்சி முன்னாள் பெரும் தலைவர் அருள்குமார் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
78 வது சுதந்திர தின விழா மற்றும் சிசிடிவி கேமரா துவக்க நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் சாய்பாபா காலனி சரக காவல் உதவி ஆணையர் திரு.ஜே.நவீன் குமார் B.E. அவர்கள் கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
துடியலூர் காவல் ஆய்வாளர் நிதின்குமார் காவல் உதவி ஆய்வாளர், அருண்குமார் கோயம்புத்தூர் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் ஆர்.எழில் அவர்களும் மற்றும் வெள்ளகிணர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர்.நிர்மலா தேவி, கோயம்புத்தூர் மாநகராட்சி முன்னாள் மன்ற உறுப்பினர் சாரதா சண்முகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.விழாவின் இறுதி நிகழ்ச்சியாக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தனர்.
குடியிருப்போர் நல சங்க தலைவர் பி. இராஜகோபால் தலைமை தாங்கியும், செயலாளர் பி.பழனிசாமி வரவேற்புரை ஆற்றியும் இறுதியாக பொருளாளர் டி.எஸ். பாலகிருஷ்ணன் நாயர் நன்றி உரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.