மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பேசுகையில்
அதிமுகவில் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடியாரல் கொண்டு வந்த திட்டங்களில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தான் செய்ததாக கூறுவதாகவும் மயிலாடுதுறையை மாவட்டமாக உருவாக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டடம் கட்ட தருமபுர ஆதினத்திடம் 10 கோடி ரூபாய் பணம் கொடுத்து இடத்தை வாங்கியது அதிமுக அதில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தான் கட்டியதாக திமுக கூறுகிறது. குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய் பணம் கொடுத்தவர் எடப்பாடியார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து விட்டார். அதுவும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று ஆட்சி நடத்தினோம் ஆனால் திமுகவினர் குடும்பத்தை முன்னேற்றுவதற்காக ஆட்சி நடத்துவதாக குற்றம் சாட்டினார். இதில் அமைப்புச் செயலாளர் சிவ ராஜமாணிக்கம் தலைமை கழக பேச்சாளர் நேமம் அன்பு முருகன் சிறப்புரையாற்றினர். நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் அன்பரசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.