தென் தாமரைக்குளம் பிப் 25
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின்படியும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் ஆணைக்கிணங்கவும்
குமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் உடல் உழைப்பு மற்றும் கட்டுமான பிரிவு சார்பாகவும், அண்ணா தொழிற்சங்கம் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர்கள் சார்பாகவும்,
அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கழகம் சார்பாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.
தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு கழக அவைத் தலைவர் சேவியர் மனோகரன், தலைமை தாங்கினார்.
அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் வைகுண்டமணி, மாவட்ட கழக துணை செயலாளர் சுகுமாரன், தமிழ்நாடு சிவில் சப்ளை மண்டல தலைவர் பிரம்ம நாதன், மண்டல செயலாளர் நடராஜன், மண்டல பொருளாளர் வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் வழக்கறிஞர் சிவசெல்வராஜன், இலக்கிய அணி மாநில இணைச் செயலாளர் சந்துரு, வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ராஜன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரபீக், தேவராஜ், இசங்கை மாதவன் பங்கேற்றனர்.
இதில் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்