தருமபுரி மாவட்டத்தில் 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலும், தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கியில் பொது மேலாளர் தலைமையிலும், அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையிலும், அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களிலும்குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரூர் மேல் பாட்சா பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் சூரிய தனபால், நியமனகுழு உறுப்பினர் முல்லை ரவி, பேரூராட்சி உறுப்பினர் அருள், மொழி, மோகன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர். மேலும் கக்கன் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் 76- வது குடியரசு தின விழாவைமுன்னிட்டு பிடமனேரியில்
உள்ள துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது
. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். நடராஜன், நாகராஜன், வாசு, ஜெயராமன், வைஜெயந்தி, முத்துவேல் மற்றும் ஜெயம் யோகா மையத்தின் நிறுவனர் ஜெயபிராயா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கக்கன் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் கமல கண்ணன், பாவெல்ராஜ், நவீன் குமார், நாகேந்திரன், ரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாலக்கோட்டில் மகாகவி பாரதியார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பொதுமக்கள் சார்பில் 76-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் இளங்கோ முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் தேசிய கொடி ஏற்றி வைத்தார். வெங்கிடு சாமி வட்டார போக்குவரத்து அலுவலர், சிவா முன்னாள் மண்டல தலைவர் பி.ஜே.பி, கணேசன் நகர தலைவர், சரவணன் சமூக சேவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.