திருப்பத்தூர்:ஜன:27, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படையில் 76 வது குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்திய விஷமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யின் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப., ஆகியோர் நினைவு பரிசு கேடயத்தினை வழங்கி சிறப்பித்தார்.
உடன் பள்ளியின் செயலாளர் மற்றும் முதல்வர் கௌதம், ஆசிரியர்கள் உள்ளனர்.