திருப்பத்தூர்:ஜன:27, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்திய நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காவல் துறையினரின் சிறப்பான அணிவகுப்பை மரியாதையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா சமாதான புறாவையும் பறக்க விட்டனர்.
இவ்விழாவில் கமோன்டோ படையினரின் வீரதீர செயல் அலங்கார சாகாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
மேலும் சிறப்பாக பணியாற்றிய 25 காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் முதலமைச்சர் பதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் 119 பயணாளிகளுக்கு ஒரு கோடியே 42
மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
கலை, கலாச்சாரம், பாரம்பரியம், தேசப் பற்று ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை நிகழ்த்திய மாணவ , மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ்
மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் நினைவு பரிசு கேடயங்களை வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் மாணவ மாணவிகளின் பறை இசை, சிலம்பம், கிராமிய நடனங்கள், விழிப்புணர்வு நாடகங்கள், பாடல், கும்மி, கோலாட்டம், கரகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடனம் ஆகியவை இடம்பெற்றது அனைவரையும் கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன்,மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் செல்வம், மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள்,காவல் துறையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.