திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:நவ:27, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 75- வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இந்திய அரசமைப்பு முகப்புரையை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப, தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டாக்டர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) சதீஷ்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.