கிருஷ்ணகிரி,செப்.18-
கிருஷ்ணகிரி மாவட்டம் மருதேரி ஊராட்சி பேருஹள்ளி கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் பேருஹள்ளி பேருந்து நிலையம் அருகில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து கோவில்களில் சிறப்பு பூஜைகளும்,அபிஷேகமும் செய்யப்பட்டது. பிறகு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பு படம் உள்ளது பாரதப் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா