தஞ்சாவூர். நவ.22
தஞ்சாவூர் மாநகராட்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் உயர்கல்
வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் முன்னிலை வகித்து 2806 பயனாளிகளுக்கு
ரூ2288.12 இலட்சம் கடனுதவிக் கான காசோலைகலைகளை உயர்கல்வித் துறை அமைச்சர்
முனைவர்.கோவி.செழியன்.
வழங்கினார், அப்போது
உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 340 கூட்டுறவு நிறுவனங்கள் 2 மத்திய கூட்டுறவு வங்கிகள், 243 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,6 நகர கூட்டுறவு வங்கிகள் ,1 நகர கூட்டுறவு கடன் சங்கம், 53 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், 8 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 5 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், 9 தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள், 1 கூட்டுறவு அச்சகம், 1 கூட்டுறவு ஒன்றியம் மற்றும் 9 மாணவர் கூட்டுறவு பண்டகசாலைகள் என கூட்டுறவுத்துறையின் கீழ் 340 கூட்டுறவு நிறுவனங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் 14 செயற் பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொடக்க வகை கூட்டுறவு சங்கங்கள் முதல் மாவட்ட மற்றும் மாநில அளவிலான 22,000 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்கள் அனைவரும் கூட்டுறவில் பயன்பெற வேண்டும் என்ற வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழா கொண்டாடப் படுகிறது.முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் திங்கள் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் வழிகாட்டுதலின் படி கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகி
றது.தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பயிர்கடன் தள்ளுபடி திட்டம் 2021 கீழ் தமிழ்நாட்டில் 1B.43,347 விவசாயிகள் பெற்ற ரூ.12 ஆயிரத்து 489 கோடி தொகைக் கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 66,912 விவசாயிகள் பெற்ற ரூ.484 கோடியே 40 இலட்சம் தொகைக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 2021 கீழ் தமிழ்நாடு மாநிலத்தில் 14இலட்சத்து 52 ஆயிரம் ஏழை எளிய மக்கள் வாங்கிய ரூ.5 ஆயிரத்து 13 கோடி தொகைக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 42,096 கடன்களுக்கான ரூ.130 கோடியே 5 இலட்சம் தொகைக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி 2021 திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்தில் 1இலட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய ரூ2 ஆயிரத்து 756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 15 இலட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 5290 சுய உதவிக்குழுக்களின் 51,345 உறுப்பினர்களுக்கான கடன் தொகை ரூ.78.56 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற்றனர் என தெரிவித்தார்
முன்னதாக 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 69 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 425 பயனாளிகளுக்கு ரூ45155 இலட்சம் கடனுதவி தொகையும், நாட்டுப்புற கலைஞர் கடன் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சம் கடனுதவி தொகையும், சிறுவணிக கடன் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.1175 இலட்சம் கடனுதவி தொகையும், டாப்செட்கோ மூலம் 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் கடனுதவி தொகையும், பணிபுரியும் மகளிர் கடனுதவி திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.10.50 இலட்சம் கடனுதவி தொகையும், சிறுகுறு தொழில்கடன் கடன் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.8.00 இலட்சம் கடனுதவி தொகையும், பயிர்/கால்நடை நகைக்கடன் திட்டத்தின் கீழ் 2318 பயனாளிகளுக்கு ரூ.1788.85 இலட்சம் கடனுதவி தொகையும், கைம்பெண்கள் கடன் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.3.90 இலட்சம் கடனுதவி தொகையும், மகளிர் தொழில் முனைவோர் கடன் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.98 ஆயிரம் கடனுதவி தொகையும், மாற்றுத்திறனாளிக் கடன் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.4.41 இலட்சம் கடனுதவி தொகையும், மத்தியகாலக் விவசாயக் கடன் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.4.72 இலட்சம் கடனுதவி தொகையும், பண்ணை சாராக் கடன் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ96 ஆயிரம் கடனுதவி தொகையும். என 2806 பயனாளிகளுக்கு ரூ2288.12 இலட்சம் கடனுதவிக்கான காசோலைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்.
அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசு மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளும், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களும் வழங்கினார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம்மயிலா
டுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், கும்பகோண ம் மாநகராட்சி மேயர் க.சரவணன்,உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார்,
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சி.தமிழ் நங்கை,மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் த.பிரபு (தஞ்சாவூர்) சு.முத்துக்குமார் (கும்பகோணம்), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன், சதய விழா குழு தலைவர் து.செல்வம், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி கும்பகோணம் மாநகராட்சி துணைமேயர் சு.ப.தமிழழகன் பூதலூர் ஒன்றிய குழுத் தலைவர் கல்லணை செல்லக்கண்ணு அம்மாப்பேட்டை ஒன்றிய குமுத் தலைவர் கலைச்செல்வன், திருவிடைமருதூர் ஒன்றிய குழுத்தலைவர் சு. பா.திருநாவுக்கரசு, ஒரத்தநாடு ஒன்றிய குழு தலைவர்
பார்வதிசிவசங்கர், பட்டுக்கோட்டை ஒன்றிய குழுத்தலைவர் பழநிவேல், பாபநாசம் ஒன்றிய குழுக்தலைவர் சுமதி கண்ணதாசன்,பட்டுகோட்டை நகர மன்றத் தலைவர் சண்முகபிரியா, தஞ்சாவூர் ஒன்றிய துணைத் தலைவர் அருளானந்தசாமி,கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர்,முதன்மை வருவாய் அலுவலர் ஆர்.பிரியதர்ஷினி,தஞ்சாவூர் இணைப்பதிவாளர் அலுவலகம் துணைப் பதிவாளர் பணியாளர் அலுவலர் சௌ.அப்துல்மஜீத் துணைப் பதிவாளர்கள் சுகி.சுவாமிநாதன் (பட்டுக்கோட்டை சரகம்) க.பாலமுருகன் (கும்பகோணம் சரகம்,, கும்பகோணம் துணைப் பதிவாளர் /செயலாட்சியர் CCWS ஆர்.பழனியப்பன் பொதுவிநியோக திட்ட துணைப் பதிவாளர் ஆ.சு.லேகா. தஞ்சாவூர் துணைப் பதிவாளர் / செயலாட்சியர் TCWS ஆ.கேத்ரின், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் / முதன்மை வருவாய் அலுவலர் ஆர்.கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர்கள் என்.அக்கினிய அம்மாள் (தஞ்சாவூர்) ச.இளையராணி (கும்பகோணம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.